< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி...!
|31 Dec 2023 6:14 PM IST
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமடைத்தவர் நடிகர் அன்பழகன்.
சென்னை,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் பி.டி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைத்தவர் நடிகர் அன்பழகன். அந்த தொடரில் அவர் கூறும் 'எஸ் சார், நோ சார், ஓகே சார்' என்ற வசனம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதனை தொடர்ந்து ரெட்டைவால், தாயுமானவன், மாப்பிள்ளை, காற்றுக்கென்ன வேலி போன்ற பல்வேறு தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் சீதாராமன், அண்ணா உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கண்டிகை பகுதியை சேர்ந்த நடிகர் அன்பழகன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.