< Back
சினிமா செய்திகள்
பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்
சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்

தினத்தந்தி
|
31 Jan 2023 8:09 AM IST

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னி வெர்ஷிங் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னி வெர்ஷிங். இவர் 'புரூஸ் அல்மைட்டி', 'பிலோ த பெல்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 24, போஷ், டைம்லெஸ் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

'தி லாஸ்ட் ஆப் அஸ்' என்ற வீடியோ கேமில் டெஸ் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.

அன்னி வெர்ஷிங்குக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அன்னி வெர்ஷிங் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. அன்னி வெர்ஷிங் மரணம் அடைந்த தகவலை அவரது கணவர் ஸ்டீபன் புல் தெரிவித்து உள்ளார். அன்னி வெர்ஷிங் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்