பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்...!
|புகழ் பெற்ற டி.சி. காமிக்ஸ் தொடரில் ஹார்லி குயின் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர்
பிரபல ஹாலிவுட் நடிகை ஆர்லீன் சோர்கின். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
உலக புகழ் பெற்ற டி.சி. காமிக்ஸ் தொடரில் ஹார்லி குயின் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தும் வந்தார். வீடியோ கேம்களிலும் ஹார்லி குயின் கதாபாத்திரத்துக்கு குரல் வடிவம் கொடுத்துள்ளார்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வந்த ஆர்லீன் சோர்கின், நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆர்லீன் சோர்கின் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.
இதுகுறித்து டி.சி. காமிக்ஸ் நிறுவன அதிகாரி கூறும்போது, "ஆர்லீன் சோர்கின் மிக திறமையான நடிகை. உலக புகழ்பெற்ற ஹார்லி குயின் கதாபாத்திரத்துக்கு பல ஆண்டுகளாக குரல் வழியாக உயிர் கொடுத்தவர். அந்த குரல்தான் கதாபாத்திரத்தின் அடையாளம்'', என்றார்.
மரணம் அடைந்த ஆர்லீன் சோர்கினுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்லீன் சோர்கின் கணவர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான கிறிஸ்டோபர் லாயிட் ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.