< Back
சினிமா செய்திகள்
சங்கராபரணம் படத்தில் பணியாற்றிய பிரபல சினிமா எடிட்டர் மரணம்
சினிமா செய்திகள்

'சங்கராபரணம்' படத்தில் பணியாற்றிய பிரபல சினிமா எடிட்டர் மரணம்

தினத்தந்தி
|
22 Feb 2023 8:17 AM IST

பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீ ஜிஜி கிருஷ்ணா ராவ் பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணி செய்துள்ளார். பழம்பெரும் டைரக்டர்கள் கே.விஸ்வநாத், பாபு, ஜந்தியாலா, தாசரி நாராயண ராவ் உள்ளிட்ட பலரது படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார்.

சினிமா மீதான ஆர்வம் காரணமாக நிறைய படங்களில் இணை இயக்குனர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் வேலைகளையும் செய்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'சலங்கை ஒலி' மற்றும் 'ஏழுமலையான் மகிமை' ஆகிய தமிழ் படங்களிலும் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.

'சங்கராபரணம்', 'சுவாதி முத்யம்', 'சுபலேகா', 'பொப்பிலி', 'சர்தார் பாபாராயுடு', 'சூத்ரதரலு', 'சீதாமகாலட்சுமி' போன்ற பல தெலுங்கு படங்களில் எடிட்டராக பணி செய்துள்ளார். 'மிலன்', 'ஈஸ்வர்', 'சுர் சங்கம்', 'ஜவர் பாடா மஸ்தானா' உள்ளிட்ட பல இந்தி படங்களும் இவரது படத்தொகுப்பில் வந்தன.

மேலும் செய்திகள்