பிரபல டைரக்டர் மரணம்
|மூத்த தெலுங்கு டைரக்டர் வித்யாசாகர் ரெட்டி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
தெலுங்கு சினிமா துறையில் சமீப காலமாக தொடர்ந்து பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர். நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா, நடிகர் பிரபாசின் உறவினரும் பிரபல நடிகருமான கிருஷ்ணன் ராஜு, நடிகர் கைகாலா சத்ய நாராயணா ஆகியோர் இறந்தனர். சில தினங்களுக்கு முன்பு பழம்பெரும் நடிகை ஜமுனா மரணம் அடைந்தார்.
தற்போது மூத்த தெலுங்கு டைரக்டர் வித்யாசாகர் ரெட்டி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. நரேஷ், விஜயசாந்தி நடித்து 1983-ல் வெளியான ராகாசி லோயா படம் மூலம் வித்யாசாகர் ரெட்டி டைரக்டராக அறிமுகமானார். தொடர்ந்து டாக்கு ஸ்டூவர்ட் புரம் தொங்கலு, ஓசி னா மரதலா, ராமசக்கரோடு, அம்மா தொங்கா, அன்வேஷனா, ஆக்ஷன் நம்பர் ஒன், கைதி பிரதர்ஸ், ஊசி நா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.
வித்யாசாகர் ரெட்டி மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.