< Back
சினிமா செய்திகள்
பிரபல டைரக்டர் போலீசில் புகார்
சினிமா செய்திகள்

பிரபல டைரக்டர் போலீசில் புகார்

தினத்தந்தி
|
23 July 2022 8:34 AM IST

பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா போலீசில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா. இவர் சூர்யா நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ரத்த சரித்திரம் படத்தை இயக்கி இருந்தார். சந்தன கடத்தல் வீரப்பன் கதையை தமிழ், கன்னட மொழிகளில் இயக்கினார். தற்போது கவர்ச்சி படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் லட்கி என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த நிலையில் ரவிக்குமார் ரெட்டி என்பவர் மீது ராம்கோபால் வர்மா பஞ்ச குட்டா போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், ''ரவிக்குமார் ரெட்டி போலி ஆவணம் மூலம் என்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். நான் அவருக்கு ரூ.1.33 கோடி கொடுக்க வேண்டி இருப்பதாக போலியான கடிதத்தை உருவாக்கி அந்த கடிதத்தின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து படத்தை நிறுத்த செய்தார். அவர் தாக்கல் செய்த கடிதத்தில் இருப்பது எனது கையெழுத்து இல்லை. போலியாக அந்த கடிதத்தை தயார் செய்து உள்ளார்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்