தயாரிப்பாளரான பிரபல நடிகை
|நடிகை ரஞ்சனா நாச்சியார் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்.
தமிழில் 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
இவர் தற்போது சினிமா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். ஸ்டார் குரு பிலிம் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனத்தை தொடங்கி ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கிறார்.
இதில் ஒரு படத்தை பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சரவண சக்தி டைரக்டு செய்கிறார். இன்னொரு படத்தை அறிமுக டைரக்டர் சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுக்கான நடிகர் தேர்வு நடக்கிறது.
தயாரிப்பாளரானது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது, "என்னை பார்த்து ஜெயிக்க முடியாது என்று பலர் கூறினர். ஆனால் ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன். அதன் முதற்கட்டமாக தயாரிப்பு நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்காக படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.
பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன்'' என்றார்.