பிரபல நடிகை பாலியல் புகார்
|பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார். இவர் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் போலீஸ் நிலையத்தில் பாயல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், "எனது செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்தன. அந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. அவர் என்னுடைய தூரத்து உறவினரும் ஆவார்.
அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே இன்னொரு நம்பரில் இருந்து ஆபாச குறுந்தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பினார். அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.