கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை...!
|சிரஞ்சீவி வீட்டு மருமகள் ஆவதால் நடிகை லாவண்யா திரிபாதி கவர்ச்சியாக நடிக்க மறுத்துள்ளார்
தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து பிரபலமான லாவண்யா திரிபாதி தொடர்ந்து 'மாயவன்' படத்திலும் நடித்தார். தற்போது 'தணல்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் காதல் மலர்ந்து திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் சிரஞ்சீவி வீட்டு மருமகள் ஆவதால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களிடம் லாவண்யா திரிபாதி தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே அரைகுறை ஆடையில் நடிக்க ஒப்பந்தமான சில படங்களில் இருந்தும் வெளியேறி விட்டார்.
தமிழில் ஒப்பந்தம் செய்து இருந்த ஒரு வெப் தொடரிலும் நடிக்க மறுத்து விட்டார். காரணம் இதில் அவரது கதாபாத்திரத்தை கவர்ச்சியும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுமாக வடிவமைத்து இருந்தனர்.
இன்னும் சில நாட்களில் சிரஞ்சீவியின் வீட்டில் மருமகளாக அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், இதுபோன்ற கவர்ச்சி வேடங்களில் நடிப்பது சரியல்ல என்று படக்குழுவினருக்கு தெரிவித்தாராம். இந்த விஷயம் தெரிந்த சிரஞ்சீவி குடும்ப ரசிகர்கள் அவரது முடிவை பாராட்டி வருகிறார்கள்.