< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் திருமணம்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் திருமணம்

தினத்தந்தி
|
15 March 2023 7:34 AM IST

பிரபல நடிகர் ராகுல் மாதவ். இவர் தமிழில் ஜெய்யுடன் 'அதே நேரம் அதே இடம்' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 'யுகம்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வந்தார்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ராகுல் மாதவுக்கு, தீபஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது.

இந்த நிலையில் ராகுல் மாதவ்-தீபஸ்ரீ திருமணம் பெங்களூருவில் நடந்தது. திருமணத்தில் டைரக்டர் ஷாஜி கைலாஷ், நடிகர் சைஜு குரூப், நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்