< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் மரணம்
|18 Oct 2022 8:45 AM IST
பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா சாஸ்திரி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா சாஸ்திரி. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஜிதேந்திரா சாஸ்திரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.
ஜிதேந்திரா சாஸ்திரி பிளாக் பிரைடே, இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட், ராஜ்மா சாவ்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார். ஓ.டி.டி. தளத்தில் வெளியான மிர்சாபூர் தொடரில் நடித்த உஸ்மான் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். ஜிதேந்திரா சாஸ்திரி மறைவுக்கு இந்தி நடிகர்- நடிகைகள் வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.