கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய பிரபல நடிகர் கைது
|கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய பிரபல நடிகர் வினீத் தட்டில் டேவிட்டை போலீசார் கைது செய்தனர்.
பிரபல மலையாள நடிகர் வினீத் தட்டில் டேவிட். இவர் பிருதிவிராஜ், பிஜுமேனன் ஆகியோர் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அங்கமாலி டைரீஸ், ஆடு-ஒரு பீகர ஜீவி அணு 2, ஜூன், திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். வினீத் தட்டில் சேர்ந்தல துறவூரில் வசிக்கும் அலெக்ஸ் என்பவரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வினீத் தட்டில் டேவிட் வீட்டுக்கு சென்று ரூ.3 லட்சம் கடனை அலெக்ஸ் திருப்பி கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு அலெக்சை வினீத் தட்டில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் கையில் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து திருச்சூரில் வைத்து வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்தனர். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.