< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் அடடே மனோகர் காலமானார்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் அடடே மனோகர் காலமானார்

தினத்தந்தி
|
28 Feb 2024 4:35 PM IST

அடடே மனோகர் சுமார் 3,500க்கு மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

சென்னை,

பழம்பெரும் நாடகம் மற்றும் சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோகர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். சுமார் 3,500-க்கு மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 நாடகங்களை இவரே எழுதி இயக்கி நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரங்களை இவர் விரும்பி ஏற்று நடிப்பவர். மேடையிலேயே நேரடியாக பாடி நடிப்பதும் இவரது தனிச்சிறப்பு. வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ள இவர், கிட்டதட்ட 15 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்