< Back
சினிமா செய்திகள்
கால்பந்து போட்டியில் மயங்கி விழுந்தார்... பிரபல காமெடி நடிகர் மரணம்
சினிமா செய்திகள்

கால்பந்து போட்டியில் மயங்கி விழுந்தார்... பிரபல காமெடி நடிகர் மரணம்

தினத்தந்தி
|
27 April 2023 3:39 PM IST

பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயா. இவர் நாடக நடிகராக இருந்து 1979-ல் அண்ணியாருதே பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அதிக படங்களில் நடித்து பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார். சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மம்மூக்கோயாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. கேரள மாநிலம் களிகவு மாவட்டத்தில் நடந்த கால்பந்து போட்டியில் மம்மூக்கோயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சு விட திணறி மயங்கி கீழே விழுந்தார்.

அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்