< Back
சினிமா செய்திகள்
வடிவேலுவுடன் இணையும் பகத் பாசில்... புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது...!
சினிமா செய்திகள்

வடிவேலுவுடன் இணையும் பகத் பாசில்... புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது...!

தினத்தந்தி
|
1 Jan 2024 4:47 PM IST

ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இந்த படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர் வடிவேலு 'மாமன்னன்' கதாபாத்திரத்திலும் பகத் பாசில் 'ரத்தினவேல்' கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். அதில் மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தை பாராட்டி பதிவிட்டனர்.

இந்நிலையில் ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது. அந்த படத்தில் நடிகர் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்