மீண்டும் வில்லனாக பகத் பாசில்...!
|ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனி ஒருவன் முதல் பாகத்தில் அரவிந்தசாமி வில்லனாக நடித்து இருந்தார். அவரது ஸ்டைலிசான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதில் கிளைமாக்ஸ் காட்சியில் அரவிந்தசாமி இறந்து விடுவதுபோல் படத்தை முடித்து இருந்ததால் இரண்டாம் பாகத்துக்கு புதிய வில்லனை பரிசீலித்து பகத் பாசில் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். பகத் பாசில் சம்மதிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.