பகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
|பகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வளம் வருபவர் பகத் பாசில். தமிழிலும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரித்து சித்தார்த் நாதெல்லா இயக்கும் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்திற்கு ஆக்ஸிஜன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதுபற்றி எஸ்.எஸ்.கார்த்திகேயா கூறும்போது, 'பிரேமலு படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பகத் பாசில் நடிக்கும் 'ஆக்சிஜன்' படத்தை தயாரிக்கிறேன். மேலும் அவரை வைத்து மற்றொரு படத்தையும் தயாரிக்கிறேன்' என்று கூறினார்.
இந்நிலையில், ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.