< Back
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் மாமன்னன் ரத்னவேலு... புகைப்படத்தை அப்டேட் செய்த பகத் பாசில்
சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் 'மாமன்னன்' ரத்னவேலு... புகைப்படத்தை அப்டேட் செய்த பகத் பாசில்

தினத்தந்தி
|
1 Aug 2023 10:19 PM IST

ரத்னவேலு கதாபாத்திரத்தை வைத்து பல்வேறு மீம்ஸ்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' திரைப்படம் கடந்த ஜூலை 27-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இந்த படத்தில் 'ரத்னவேலு' என்ற கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது 'ரத்னவேலு' கதாபாத்திரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதை வைத்து பல்வேறு மீம்ஸ்களையும், வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார். அதில் 'மாமன்னன்' படத்தில் தான் நடித்த 'ரத்னவேலு' கதாபாத்திரத்தின் புகைப்படத்தை அவர் அப்டேட் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்