"சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்"- நடிகை கஜோல் திடீர் முடிவு.
|பிரபல நடிகை கஜோல் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரபல இந்தி திரைப்பட நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.நடிகர் அஜய் தேவ்கான் மனைவியான நடிகை கஜோல் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்ட அனைத்து இடுகைகளையும் நீக்கியுள்ளார்.
கஜோல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பதிவில், "என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்" என்று எழுதினார். "சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறி உள்ளார். சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை .
இந்நிலையில் சிலர் இதனை நடிகை கஜோல் நடித்து அடுத்து வரவிருக்கும் வலைத் தொடரான' தி குட் வைப் - அமெரிக்க கோர்ட்ரூம்' நாடகத்தின் இந்தித் தழுவலுக்கு விளம்பர உத்தியாக இருக்கும் என்று கருதுகின்றனர்.சமூக ஊடகத்தின் ஒரு பிரிவு அவருக்கு வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளது.
இவரது இந்த முடிவிற்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.