< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன் - நடிகை டாப்சி
சினிமா செய்திகள்

சினிமாவில் எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன் - நடிகை டாப்சி

தினத்தந்தி
|
6 May 2024 7:10 AM IST

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சவாலாக எடுத்து நடித்தேன் என்று நடிகை டாப்சி கூறினார்.

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்த டாப்சி இந்திக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன். தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 14 ஆண்டுகளை கடந்து விட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சவாலாக எடுத்து நடித்தேன். சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது.

இந்த நிலைக்கு வர எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறினேன். எனது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்து இருக்கிறது. இதை எனது சாதனையாக நினைத்து சந்தோஷப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்