< Back
சினிமா செய்திகள்
முத்த காட்சிக்கு கூடுதல் பணமா? வதந்தியால் காட்டமான நடிகை ராஷ்மிகா
சினிமா செய்திகள்

முத்த காட்சிக்கு கூடுதல் பணமா? வதந்தியால் காட்டமான நடிகை ராஷ்மிகா

தினத்தந்தி
|
18 Oct 2023 6:56 AM IST

முத்த காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ராஷ்மிகா வாங்கி கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, 'புஷ்பா' படம் மூலம் தெலுங்கிலும் பிரபலமானார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்துள்ள 'அனிமல்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

'அனிமல்' படத்துக்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ராஷ்மிகா மந்தனாவும், ரன்பீர் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி ராஷ்மிகா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முத்த காட்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இன்னும் சிலர் ராஷ்மிகாவின் துணிச்சலை பாராட்டி உள்ளனர்.

இந்த நிலையில் முத்த காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ராஷ்மிகா வாங்கி கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதனால் காட்டமான ராஷ்மிகா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்பது இல்லை என்றும், கதை பிடித்து இருந்தால் எந்த காட்சியிலும் நடிக்க சம்மதம் சொல்வதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்