பரபரப்பான புதிய தகவல்கள் நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா?
|நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படு கிறது.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பதே அது. அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள்.
அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படு கிறது.
நயன்தாராவின் அண்ணன் துபாயில் இருக்கிறார். மேலும் ஏராளமான மலையாளிகள் துபாயில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் மூலம் வாடகை தாய் ஏற்பாடு நடந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.