முன்னாள் முதல்-மந்திரி பேரன்... காதலருடன் சுற்றும் ஜான்வி கபூர்
|தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி, இந்தி திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். ஜான்வி கபூர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும், மராட்டிய முன்னாள் முதல்- மந்திரி சுசில் குமார் ஷிண்டே பேரன் ஷிகர் பஹாரரியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ஜான்வி கபூரும், ஷிகர் பஹாரரியாவும் திருப்பதிக்கு சென்று சாமிகும்பிட்டனர். இருவரும் ஜோடியாக கோவிலில் வலம் வரும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவர்கள் காதலிப்பது உறுதியாகி இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் இந்தி பட உலகில் பேச்சு கிளம்பி உள்ளது. ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார்.