< Back
சினிமா செய்திகள்
நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவில்லை- ராக்கி சாவந்த்தின் முன்னாள் கணவர்
சினிமா செய்திகள்

'நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவில்லை'- ராக்கி சாவந்த்தின் முன்னாள் கணவர்

தினத்தந்தி
|
16 March 2024 8:56 AM IST

நடிகை ராக்கி சாவந்த் எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடுதான் இருப்பார் என்று முன்னாள் கணவர் துரானி கூறினார்.

மும்பை,

பிரபல நடிகையான ராக்கி சாவந்த் தமிழில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தார். என் சகியே, முத்திரை போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அவர், அதில் துரானி என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக போலீசில் ராக்கி சாவந்த் புகார் அளித்தார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் நடிகை சோமி கானை, அதில் துரானி 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இதுகுறித்து அதில் துரானி அளித்துள்ள பேட்டியில், "நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தினர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்போது எனது மனைவியுடன் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டது தவறு இல்லை.

ராக்கி சாவந்த் எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடுதான் இருப்பார். அவர் ஒருபோதும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்ததில்லை. ராக்கி சாவந்த் யார் வாழ்க்கையில் நுழைந்தாலும் அவர்களுடைய மகிழ்ச்சி போய்விடும். நான் ராக்கி சாவந்த்போல் இல்லை. எல்லோருக்கும் மகிழ்ச்சியை பகிர்வேன்'' என்றார்.

மேலும் செய்திகள்