< Back
சினிமா செய்திகள்
Everyone who showered their love for shobana - Nithya Menon

image courtecy:twitter@nithyaMenonoff

சினிமா செய்திகள்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது - நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு

தினத்தந்தி
|
17 Aug 2024 8:45 AM IST

நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி, 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில், சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகளை 'பொன்னியின் செல்வன் 1' அள்ளியது.

மேலும், சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கும் சிறந்த நடனத்திற்காக ஜானி மாஸ்டருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்காக கிடைத்தது. இந்நிலையில், நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'எந்த சாதனையும் ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. இந்த தேசிய விருது 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்கு தங்களின் உழைப்பை கொடுத்தவர்கள், சோபனா மீது அன்பை பொழிந்தவர்கள் என அனைவருக்குமானது. சோபனா என்ற ஒளியின் முகமாக இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்', இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்