வெற்றிக்கு பின்பும், அதே கார்த்திக் ஆர்யனாக இருக்கிறார்; நடிகை கிரீத்தி சனோன்
|பூல் புலாயா 2ன் வெற்றிக்கு பின்பும், முன்பிருந்தது போன்று அதே கார்த்திக் ஆர்யனாக இருக்கிறார் என நடிகை கிரீத்தி சனோன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடிகர் அக்சய் குமார் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் பூல் புலையா. இதன் இரண்டாம் பாகத்தில் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்து உள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.
டி-சீரிஸ் நிறுவன தலைவர் மற்றும் பட தயாரிப்பாளரான பூஷண் குமார் மற்றும் நடிகர் கார்த்திக் ஆர்யன் இணைந்து இதுவரை இரண்டு வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர். அவற்றில், கடந்த 2018ம் ஆண்டு வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படம் வசூலில் அதிக லாபம் ஈட்டியது.
அதனை தொடர்ந்து, இவர்களது கூட்டணியில் சமீபத்தில் வெளியான பூல் புலாயா 2 படமும் பாக்ஸ் ஆபீசில் உலகம் முழுவதும் ரூ.230 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில், நடிகைகள் தபு மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்டோரும் நடித்து உள்ளனர்.
அடுத்து ஷேஜடா என்ற படத்தில் கார்த்திக் மற்றும் பூஷண் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதில், கார்த்திக்குக்கு ஜோடியாக நடிகை கிரீத்தி சனோன் நடிக்கிறார். பரேஷ் ராவல் மற்றும் நடிகை மணீஷா கொய்ராலா உள்ளிட்டோரும் நடிக்கும் இந்த படத்தின் இயக்குனர் பணியை ரோகித் தவான் மேற்கொள்கிறார்.
பூல் புலையா 2ன் புரமோசன் பணியில், நடிகை கிரீத்தி சனோனையும் கார்த்திக் ஆர்யன் ஈடுபடுத்தி உள்ளார். இதுபற்றி கார்த்திக் கூறும்போது, ஷேஜடா படத்தின் புரமோசன் வரை, காமெடி மற்றும் திகில் நிறைந்த பூல் புலையா 2ன் புரமோசன் பணிகள் நடைபெறும் என கூறினார்.
இந்த படம் ரூ.100 கோடி வசூல் எட்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், ரூ.200 கோடிக்கும் கூடுதலாக வசூல் செய்யும் நாங்கள் நினைக்கவேயில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கார்த்திக் உடன் அடுத்த படத்தில் நடித்து வரும் சனோனிடம் படத்தின் வசூல் பற்றி கேட்டபோது, கார்த்திக் மிக மிக உயரத்தில் சென்று விட்டார். அவரை என்னால் காண கூட முடியவில்லை என கூறினார்.
இதன்பின் வெற்றிக்கு பின்பும் அதே கார்த்திக்காக இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சனோன் கூறும்போது, பூல் புலையா 2ம் பாகத்தின் வெற்றிக்கு முன்பு எப்படி கார்த்திக் இருந்தாரோ, அதேபோன்றே இன்னமும் இருக்கிறார். அவரை அதிக உயரத்திற்கு செல்ல நாங்கள் விடமாட்டோம் என கூறினார்.
இதற்கு பதிலாக கார்த்திக் கூறும்போது, படத்தின் வெற்றிக்கு பின்பும் வலியை உணருகிறேன். ஏனெனில் நானும் மனிதனே என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு, பூல் புலையா 2 படத்தின் வெற்றிக்காக பூஷண் ரூ.4.7 கோடி விலை கொண்ட விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக சமீபத்தில் வழங்கியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் கார்த்திக் வெளியிட்ட செய்தியில், உழைப்பின் கனி இனிக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அது இவ்வளவு பெரியது என எனக்கு தெரியாது.
இந்தியாவின் முதல் மெக்லாரன் ஜி.டி. கார். அடுத்த பரிசு ஒரு தனியார் ஜெட் விமானம் ஆக கூட இருக்கும் சார். நன்றி என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஷேஜடா திரைப்படம் வரும் நவம்பர் 4ந்தேதி வெளியிடப்பட உள்ளது.