< Back
சினிமா செய்திகள்
வருங்கால கணவரை சந்தித்த பின்னும்... பலருடன் டேட்டிங்; பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை
சினிமா செய்திகள்

வருங்கால கணவரை சந்தித்த பின்னும்... பலருடன் டேட்டிங்; பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை

தினத்தந்தி
|
20 Nov 2023 5:59 PM IST

நடிகர் வீர் தாஸ் மற்றும் நடிகை ட்விங்கிள் கன்னா ஆகியோர் தீபிகா படுகோனேவின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

காபி வித் கரண் 8 என்ற நிகழ்ச்சி தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் முதல் எபிசோட்டில் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அவருடன் பிரபல நடிகர் மற்றும் அவருடைய கணவரான ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், இருவருக்கும் இடையே பல விசயங்கள் ஒத்துபோவது பற்றி ரசிகர்கள் ஆவலாக பார்த்து கொண்டிருந்தபோது, முதன்முறையாக அவர்களுடைய டேட்டிங் வாழ்க்கையை பற்றிய விசயங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டது கடும் எதிர்விளைவை ஏற்படுத்தி உள்ளது.

இதில், படுகோனே பேசும்போது, ரன்வீரை சந்தித்த பின்னரும், பல ஆண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் என கூறினார். அப்போது ரன்வீர் மற்றும் படுகோனே இருவரும் ஒன்றாக, அந்த தருணத்தில் நாங்கள் ஒன்றாக இல்லை என தெரிவித்தனர்.

தீபிகா நிகழ்ச்சியில் கூறும்போது, நான் தனியாகவே இருக்க விரும்பினேன். ஏனெனில் அதுபோன்ற கடினம் வாய்ந்த உறவுகளில் இருந்து வந்தவள் நான். பற்று கொண்டவளாகவோ, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருக்கவோ நான் விரும்பவில்லை.

ஆனால், மகிழ்ச்சியாகவே இருந்தேன். அப்போது அவர் வந்தபோதும், என்னிடம் காதலை தெரிவிக்கும் வரையும், நான் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்று ரன்வீரை குறிப்பிட்டு கூறினார்.

படுகோனேவின் டேட்டிங் பற்றிய பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும், தீபிகா படுகோனேவின் இந்த பேச்சுக்கு நடிகர் வீர் தாஸ், நடிகை ட்விங்கிள் கன்னா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி ட்விங்கிள் கன்னா அவருடைய பிளாக்கில் வெளியிட்ட செய்தியில், தீபிகா, நாட்டில் உள்ள மாமாக்கள், அத்தைகள் மற்றும் இந்தியாவில் இதுவரை திருமணம் ஆகாத நிறையபேரை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளார்.

அவர், திரைப்படத்தில் தன்னை சுற்றி, சுற்றி வரும் மீசை அரும்பிய நாயகனை பார்த்ததும் காதலில் விழுவது போன்று இல்லாமல் உண்மையை கூறியுள்ளார்.

உண்மையில் அவர், மற்றவர்களுடன் டேட்டிங் சென்றதுடன், வருங்கால கணவரையும் டேட்டிங் செய்துள்ளார். அவர் உண்மையை கூறியது பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்