< Back
சினிமா செய்திகள்
ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னைப் போன்ற சாமானியனுக்கும் எழுகிறது - விஷால்
சினிமா செய்திகள்

ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னைப் போன்ற சாமானியனுக்கும் எழுகிறது - விஷால்

தினத்தந்தி
|
30 Sept 2023 11:36 AM IST

ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னைப் போன்ற சாமானியனுக்கும் எழுகிறது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலும் குவித்து வருகிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னைப் போன்ற சாமானியனுக்கும் எழுகிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மிக்க நன்றி. ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், ஊழலின் படிகளில் அல்ல, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எனது பிரதமர் நரேந்திர மோடி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த உடனடி நடவடிக்கைக்கு காரணமான அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் நம்பிக்கை உணர்வைத் தருகிறது. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்