< Back
சினிமா செய்திகள்
நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு பாராட்டு
சினிமா செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு பாராட்டு

தினத்தந்தி
|
6 July 2022 3:08 PM IST

மஞ்சு வாரியர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். திலீபின் முன்னாள் மனைவியான இவர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டு தனது இரண்டாவது ரவுண்டில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார்.

இந்தநிலையில், மஞ்சு வாரியர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியும், நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் அளித்து வருகிறது. அதன்படி மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.

கடந்த 2021-22ம் ஆண்டுக்கான வரியை முறையாகக் கட்டியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மஞ்சுவாரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அதேபோல மலையாள தயாரிப்பாளார் அந்தோணி பெரும்பாவூருக்கும் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த லூசியர், த்ரிஷ்யம், மரைக்காயர் உள்ளபட 32 படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்