முடிந்தது நிச்சயதார்த்தம்... சாய்பல்லவி பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்
|இந்த விழாவில் நடிகை சாய்பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடினார்.
சென்னை,
கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே 21' படத்தில் நடித்து வருகிறார்.
சாய்பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளர். இவர் தமிழில் 'சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். தனது காதலன் வினீத் என்பவரையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகை சாய்பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், 'என் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. வாழ்த்துகள் வினீத் எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்' என்று பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.