< Back
சினிமா செய்திகள்
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் நண்பா சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் - விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள்
சினிமா செய்திகள்

கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் - விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள்

தினத்தந்தி
|
19 Jun 2023 10:36 PM IST

கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று நடிகர் விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இந்த நிகழ்வை குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன்.

தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்