ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் - ஏன் தெரியுமா?
|ஐஸ்வர்யா ராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மும்பை,
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி. இவரை காதல் மன்னன் என்றும் சீரியல் கிஸ்ஸர் என்று அழைக்கின்றனர். இவர் நடிக்கும் படங்களில் நாயகிகளை முத்தமிடும் காட்சி இருக்கும் என்பதால் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். அப்போது ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஷ்டிக்' என்றார். இதனால் ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மிக்கு எதிராக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில். 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லி விட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யாராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.