< Back
சினிமா செய்திகள்
ஆபாசத்துக்கே முக்கியத்துவம்; இந்தி பட உலகை சாடிய பாயல் கோஷ்
சினிமா செய்திகள்

ஆபாசத்துக்கே முக்கியத்துவம்; இந்தி பட உலகை சாடிய பாயல் கோஷ்

தினத்தந்தி
|
3 Oct 2023 11:52 AM IST

இந்தி திரையுலகில் கிரியேட்டிவிட்டியைவிட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று நடிகை பாயல் கோஷ் சாடியுள்ளார்.

தமிழில் 'தேரோடும் வீதியிலே' படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார். போலீசிலும் அனுராக் காஷ்யப் மீது புகார் அளித்தார். பின்னர் அமைதியாகி விட்டார்.

தற்போது மீண்டும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். இந்த முறை ஒட்டுமொத்த இந்தி திரையுலகையே தாக்கி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பாயல் கோஷ் கூறும்போது, ''தென்னிந்திய சினிமாவில் நான் அறிமுகமானதால் தப்பித்து கொண்டேன். இந்தி சினிமாவில் அறிமுகமாகி இருந்திருந்தால் என் உடைகள் அனைத்தையும் கழற்றி, என்னை நிர்வாணமாக காட்டியிருப்பார்கள்.

அங்கே கிரியேட்டிவிட்டியைவிட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். உடலை முழுமையாக காட்டுவதில் இருக்கும் அக்கறையை நடிப்புக்கு தருவதில்லை. ஆபாசமான காட்சிகள் மீதுதான் அவர்களின் படங்கள் ஆதாரப்பட்டு இருக்கின்றன'' என்றார்.

பாயல் கோஷ் கருத்து ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. திரையுலகினர் அவரை வசைபாடி வருகிறார்கள். ஆனாலும் தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பாயல் கோஷ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்