இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - வைரலாகும் 'எமர்ஜென்சி' பர்ஸ்ட்லுக் போஸ்டர்
|பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தான் இயக்கி நடிக்கும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தான் இயக்கி நடிக்கும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மணிகர்னிகா' திரைப்படத்தை இணைந்து இயக்கிய கங்கனா, 'எமர்ஜென்சி' திரைப்படத்தை தனி ஆளாக இயக்குகிறார். முன்னதாக அவர் 'தலைவி' திரைப்படத்தில் முன்னாள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எமர்ஜென்சி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட கங்கனா, "எமர்ஜென்சி பர்ஸ்ட்லுக் போஸ்டரை வழங்குகிறேன்! உலக வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரை சித்தரிக்கிறது.. எமர்ஜென்சி படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கங்கனா ஒன்றரை நிமிட அளவு கொண்ட அறிவிப்பு டீசரையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்திரா காந்தி தோற்றத்தில் இருப்பது போன்ற இடம்பெற்றுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.