கட்டித்தழுவிய எம்.ஜி.ஆர்., சிவாஜி
|திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது நகைச்சுவையாக ஒன்றைக் குறிப்பிட்டார்.
"தம்பி கணேஷ்! அதென்ன பொண்டாட்டி பெயரிலும், பொண்ணு பெயரிலும் தியேட்டர் கட்டி இருக்கே? உன் பெயரில் ஏன் கட்டலே?" என்று கேட்டவர், "தம்பி! உன் பெயரில் நான் கும்பகோணத்தில் இதைவிட சிறப்பான ஒரு தியேட்டர் கட்ட போகிறேன்!" என்றார்.
உடனே சிவாஜி, அதெல்லாம் வேண்டாம் என்பதுபோல் மேடையில் இருந்தபடியே இரு கைகளையும் அசைத்து சைகை செய்தார்.
இருந்தும் எம்.ஜி.ஆர். அவரை விடவில்லை, "ஏன் உனக்குத்தான் கும்பகோணத்தில் இடம் இருக்கிறது அல்லவா? அதில் கட்டி விடுவோம்" என்று கூற, மேடையில் இருந்த சிவாஜி நட்புணர்வோடு எழுந்துவர, இருவரும் கட்டித்தழுவி அன்பால் நெகிழ்ந்தனர்.
பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களோ கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். ஆனால் என்னவோ கும்பகோணத்தில் தியேட்டர் கட்டும் அவரது ஆசை மட்டும் நிறைவேறாமல் போனது!