'வீர தீர சூரன்' : 3 வேடங்களில் நடிக்கிறாரா விக்ரம்?
|'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் (பாகம்-2) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விக்ரம் 3 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.