ஷாருக்கானுடன் நடனம் ஆடிய பிரபல பாடகர் எட் ஷீரன் - வீடியோ வைரல்
|பாடகர் எட் ஷீரனை நடிகர் ஷாருக்கான் சந்தித்தார்.
மும்பை,
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகர் எட் ஷீரன். இவர் தற்போது இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த அவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் பாடல்களை பாடி மகிழ்ந்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன், மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு திரும்ப வந்தது மிகவும் அருமை, என பதிவிட்டார்.
நாளை மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்நிலையில் பாடகர் எட் ஷீரனை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சந்தித்தார். அப்போது ஷாருக்கானின் சிக்னேச்சர் போசை செய்து இருவரும் நடனமாடினர். இது தொடர்பான வீடியோவை எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எட் ஷீரன் இவ்வாறு இந்தியா வருவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது .