துணிவு, வாரிசு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து- ரசிகர்கள் ஏமாற்றம்...!
|ஜனவரி 13ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னை
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டு இருந்தது.
இரண்டு படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜனவரி 11-ம் தேதி துணிவும், வாரிசும் மோதுகின்றன. படம் வெளியாக இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன
இரண்டு படங்களின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழந்துள்ளது.
சமூக வலைத்தளம் போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது.
பொதுவாக விஜய்-அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும் 4 மணிக்கும் நடைபெறும்.இந்த ரசிகர் காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கவும் தயங்காத தீவிர ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித்திற்கு உள்ளனர்.
அத்தகைய ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது சிறப்பு ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
13,14,15,16 ஆகிய தேதிகளில் அதிகாலை சிறப்புகாட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து
திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கபட்டு உள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜனவரி 13ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திரைப்பட கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதி அளிக்கக்கூடாது;
டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிக விலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எனவும் கூறப்பட்டு உள்ளது.