< Back
சினிமா செய்திகள்
முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார் - இளையராஜா புகழாரம்
சினிமா செய்திகள்

'முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார்' - இளையராஜா புகழாரம்

தினத்தந்தி
|
22 Jan 2024 6:07 PM IST

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர், 'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடத்தபட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடி கோவிலை கட்டியுள்ளார். இது இந்தியா முழுவதற்குமான கோயில்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்