ரஜினிகாந்துடன் நடித்த துஷாரா விஜயன் - பொறாமை பட்ட தனுஷ்
|ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
சென்னை,
தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். அப்படத்தைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் சார் முதல் முறை தன்னை பார்த்து பொறாமை பட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ தனுஷ் சாருடன் ராயன் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்து கொண்டிருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் நடித்த 'வேட்டையன்' படத்திலும் நடித்து வந்தேன். தனுஷ் சார் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அப்போது, தனுஷ் சார் என்னிடம் சூப்பர் ஸ்டாருடன் நீங்கள் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதா? என கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன். உடனே தனுஷ் சார், உங்கள் மீது எனக்கு முதல் முறை பொறாமையாக இருக்கிறது என்று கூறினார்'. என்றார்
வேட்டையன் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் துஷாராவைத் தவிர மஞ்சு வாரியர், பகத் பாசில், அமிதாப்பச்சன் மற்றும் ராணா டகுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.