< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா
சினிமா செய்திகள்

'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா

தினத்தந்தி
|
2 Aug 2024 5:21 AM IST

'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை துஷாரா விஜயன் 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடிகர் பகத் பாசில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தது குறிப்பிடத்தக்கது. 'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் துஷாரா, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'ராயன்' திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இருப்பினும் துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் செய்திகள்