12 நாட்களில் சாதனை படைத்த 'டன்கி' திரைப்படம்... தொடரும் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை...!
|'டன்கி' திரைப்படம் கடந்த மாதம் 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
சென்னை,
நடிகர் ஷாருக்கான் நடித்த 'டன்கி' படம் 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கி உள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் குடிபெயர்ந்து வாழும் மக்கள் சந்திக்கும் இடர் தொடர்பான கருத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படம் வெளியான 12 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டன்கி ஆகிய 3 படங்கள் வெளியான நிலையில் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.