< Back
சினிமா செய்திகள்
ஜெய்க்கு டும்...டும்...டும்...
சினிமா செய்திகள்

ஜெய்க்கு 'டும்...டும்...டும்...'

தினத்தந்தி
|
30 Sept 2022 9:35 AM IST

ஜெய்க்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி இருக்கிறது. இந்த திருமண பேச்சுக்கான ஏற்பாடுகளை அவரது பெரியப்பாவும், இசையமைப்பாளருமான தேவா முன்னின்று செய்து வருகிறாராம்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ள நடிகர் ஜெய் குறித்து ஏராளமான சர்ச்சைகள் உலா வருகின்றன. அஞ்சலியுடன் காதல், விரைவில் திருமணம் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் பின்னர் இந்த காதல் முறிந்தது. அதைத்தொடர்ந்து வாணி போஜனுடன் காதல் என்றும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாணி போஜன் மறைமுகமாக ஒரு 'ட்வீட்' போட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 'இனி எனக்கு சினிமாதான் முக்கியம். வேறு யாரும் முக்கியமல்ல. நான் உஷார் ஆகிவிட்டேன்' என்று அதில் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெய் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார்.

இந்தநிலையில் ஜெய்க்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி இருக்கிறது. இந்த திருமண பேச்சுக்கான ஏற்பாடுகளை அவரது பெரியப்பாவும், இசையமைப்பாளருமான தேவா முன்னின்று செய்து வருகிறாராம். அடுத்தடுத்து ஜெய் பற்றி வெளிவந்த கிசுகிசுக்கள்தான் இந்த அவசர திருமண ஏற்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஜெய்யும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டி விட்டதால், அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு களை கட்டியிருக்கிறது.

மேலும் செய்திகள்