< Back
சினிமா செய்திகள்
துல்கர் சல்மான்  படத்தின் டீசர் இன்று வெளியீடு
சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் படத்தின் டீசர் இன்று வெளியீடு

தினத்தந்தி
|
11 April 2024 1:38 AM IST

லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.

சென்னை,.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

.இந்நிலையில், இன்று இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்