< Back
சினிமா செய்திகள்
3 மொழிகளில் துல்கர் சல்மான் படம்
சினிமா செய்திகள்

3 மொழிகளில் துல்கர் சல்மான் படம்

தினத்தந்தி
|
4 Aug 2023 1:59 PM IST

துல்கர் சல்மான் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை சேர்த்துள்ளார். `பான்' இந்தியா நடிகராகவும் உயர்ந்துள்ளார். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு `லக்கி பாஸ்கர்' என்று பெயர் வைத்துள்ளனர். இது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகிறது.

இந்தப் படத்தை வெங்கி அட்லூரி டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான `வாத்தி' படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துல்கர் சல்மான் படத்தை இயக்குகிறார். முக்கியமான கருவை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.

ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்களே படத்தின் மையக்கருவாக இருக்கும் என்றும், இந்தப் படம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தை சூர்யதேவரா நாக வம்சி, சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை: ஜி.வி.பிரகாஷ்.

மேலும் செய்திகள்