< Back
சினிமா செய்திகள்
சூர்யாவுடன் இணைந்த துல்கர் சல்மான் - வெளியானது சூர்யா 43 அறிவிப்பு
சினிமா செய்திகள்

சூர்யாவுடன் இணைந்த துல்கர் சல்மான் - வெளியானது 'சூர்யா 43' அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Oct 2023 4:44 PM IST

நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 43' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் வென்றது.

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மீனாட்சி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு 'புறநானூறு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்