< Back
சினிமா செய்திகள்
கமலின் தக் லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகல்?
சினிமா செய்திகள்

கமலின் 'தக் லைப்' படத்திலிருந்து ஜெயம் ரவி விலகல்?

தினத்தந்தி
|
23 March 2024 6:38 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்' (Thug Life). திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. அதன்படி , 'தக் லைப்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாயின.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் 'தக் லைப்'படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், தக் லைப் படத்திலிருந்து நடிகர் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. 'தக் லைப்' படத்தின் சூட்டிங் குளறுபடிகளால் ரவி படத்திலிருந்து விலகியுள்ளார்.

அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, ஜெனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

மேலும் செய்திகள்