< Back
சினிமா செய்திகள்
துல்கர் சல்மான் கோபம்
சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் கோபம்

தினத்தந்தி
|
21 Sept 2022 9:16 AM IST

நடிகர்களை எல்லை மீறி கேலி செய்வதாக துல்கர் சல்மான் கண்டித்தார்.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான் தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான சீதாராமம் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது பால்கி இயக்கத்தில் சுப் என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர்களை எல்லை மீறி கேலி செய்வதாக துல்கர் சல்மான் கண்டித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, ''திரைப்படங்கள் பற்றி சமீப காலமாக கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. முன்னணி நடிகர்களையும் குறி வைத்து தாக்குகிறார்கள். இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. என்னை பற்றியும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவற்றை பதிவு செய்து வைத்து இருக்கிறேன்.

நடிகர்கள் மீது விமர்சனங்கள் வருவது சகஜம்தான். ஆனால் வரம்பு மீறி விமர்சிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையிலும் நடிகர்களை விமர்சிக்கிறார்கள். கேலியும் செய்கிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேலும் செய்திகள்