< Back
சினிமா செய்திகள்
100 குழந்தைகள் சிகிச்சைக்கு உதவும் துல்கர் சல்மான்
சினிமா செய்திகள்

100 குழந்தைகள் சிகிச்சைக்கு உதவும் துல்கர் சல்மான்

தினத்தந்தி
|
17 Nov 2022 8:43 AM IST

நடிகர் துல்கர் சல்மான் சமூக சேவை பணியில் இணைந்து அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ முன் வந்து இருக்கிறார்.

நடிகர் நடிகைகள் பலர் ஏழைகளுக்கு ஓசை இல்லாமல் உதவி வருகிறார்கள். அறக்கட்டளை தொடங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர். நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணங்கள் வழங்கி படிக்கவும் வைக்கின்றனர். மருத்துவ உதவிகளும் வழங்குகிறார்கள். இந்த சமூக சேவை பணியில் இப்போது நடிகர் துல்கர் சல்மானும் இணைந்துள்ளார். இவர் அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ முன் வந்து இருக்கிறார். துல்கர் சல்மானின் இந்த முயற்சியை வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். துல்கர் சல்மான் தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட்டும் வரவேற்பை பெற்றது. இதில் நாயகிகளாக மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்