< Back
சினிமா செய்திகள்
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த துல்கர் சல்மான் படக்குழு
சினிமா செய்திகள்

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த துல்கர் சல்மான் படக்குழு

தினத்தந்தி
|
24 Jun 2023 3:10 AM IST

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்